ஆசிய விளையாட்டு போட்டிக்கு தடை ஏற்படுத்த முயன்ற குற்றவாளிகள் சுட்டுக்கொலை

ஆசிய விளையாட்டு போட்டிக்கு தடை ஏற்படுத்த முயன்ற குற்றவாளிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பலம்பாங் ஆகிய நகரங்களில் ஆரம்பமாகிய விளையாட்டு போட்டிகளில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதிய பொலிஸார், இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 77 குற்றவாளிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த போட்டிகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், 2 வாரங்கள் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

போட்டியை காண ஏராளமான ரசிகர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ள நிலையில், இதனை முன்னிட்டு குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, 1 இலட்சம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைதொடர்தே இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும். பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதி இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சமூகநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வழிப்பறி போன்ற சிறிய தவறுகளை செய்பவர்கள் என தெரிய வந்துள்ளதோடு, முதலில் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பின்னர் விசாரணை நடத்தப்பட்டது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட முதல் மாதத்திலிருந்து பொலிஸார் இத்தகைய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், ஜூலை மாதத்தில் தான் அதிகம்பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் 5 ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு. 700 க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]