ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு பதக்கங்கள்

ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு பதக்கங்கள்

ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கை வீரர்கள் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தோனேசியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வெள்ளிப்பதக்கத்தினை சுவீகரித்துள்ளது.

பிரதீப் சோமசிறி என்ற வீரர் 20.43 விநாடிகளில் இந்த ஓட்டப்போட்டியை நிறைவு செய்து இந்த வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதில் 20 விநாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து பிலிப்பைன்ஸ் வீரர் பினோ அமன் தங்க பதக்கத்தை வென்றதோடு, வெண்கல பதக்கத்தை இந்திய வீரர் பெற்றார்.

இதனை தொடர்ந்து, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர்களான சமிந்த சம்பத் ஹெட்டியாராச்சி மற்றும் அஜித் வேரகொடவும் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் சுவீகரித்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]