ஆசிய கிண்ணப்போட்டிகளில் மீண்டும் களமிறங்கும் லசித் மலிங்க

ஆசிய கிண்ணப்போட்டிகளில் மீண்டும் களமிறங்கும் லசித் மலிங்க

ஆசிய கிண்ணப்போட்டிகளில் மீண்டும் லசித் மலிங்க தனது திறமையை வெளிப்படுத்துவார் என அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரித் சேனநாயக்க கூறுகையில்,
‘இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவால் சமீப காலமாக தன்னை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

இருப்பினும், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களில் அவர் விசேடமானவர். அதனை அவர், சமீபகாலங்களில் கூட டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி நிரூபித்துள்ளார்.

அவர் இலங்கையின் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களில் சிறப்பானவராக விளங்காவிட்டாலும் பவர் பிளே ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் மிகவும் திறமையாக பந்து வீசக்கூடியவராக காணப்படுகின்றார்.

எனவே அவர் அவர் சிறப்பாக விளையாடி, இலங்கை அணிக்கு வழு சேர்ப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மலிங்க தெரிவு செய்யப்பட்டமை அணிக்கு மட்டுமல்லாது, இது அவருக்கும் ஒரு சிறப்பான விடயமாகவே காணப்படுகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தினேஸ் சந்திமல் ஆசிய கிண்ணத்தில் விளையாடுவதற்கான உடல் தகுதியை பெறுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சரித் சேனாநாயக்க அதேவேளை அகிலதனஞ்செய விளையாடாதது அணிக்கு சிறிய பின்னடைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]