ஆசியா 30 என்ற பட்டியலில் இடம்பிடித்த அனுஷ்கா சர்மா!!

போபர்ஸ் (forbes) பத்திரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக ஆசியா 30 என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.

30 வயதுக்குள் மாற்றத்தை உருவாக்கியவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் 30 பேரை ஆசிய அளவில் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வு இணையதள வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை மணந்த பிறகு அனுஷ்கா சர்மாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துள்ளது என்றும், விராட் கோலியின் வெற்றியில் அனுஷ்காவிற்கு உயரிய பங்கு இருக்கிறது என்றும் போபர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சாதாரண மாடலிங் பெண்ணாக இருந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியவர் அனுஷ்கா சர்மா என்றும் புகழ்ந்துள்ளது போபர்ஸ்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]