ஆசியாவின் ஆச்சிரியம் என்று கூறி நாட்டை பாதால குழிக்குள் தள்ளியதே மஹிந்தவின் சாதனை : பென்சேகா

ஆசியாவின் ஆச்சிரியம் என்று கூறி நாட்டை பாதால குழிக்குள் தள்ளியதையே மஹிந்த ராஜபக்ஷ செய்தார் என்று பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீட்ல் மார்ச்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில்  இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

உலகில் அனைத்துத் நாடுகளும் அபிவிருத்தியடைந்தது அந்தந்த நாடுகளின் தொழிலாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பிலுமே. எமது நாட்டின் பொருளாதாரம் 80வீதம் தொழிலாளர்களின் உழைப்பில்தான் தங்கியுள்ளது. எமது நாட்டின் தொழிலாளர் வர்க்கம்தான் உலகங்கொங்கிலும் இருந்து அந்நியச் செலவானியை பெற்றுக்கொடுக்கின்றனர்.

ஏழ்மையான 15 நாடுகளில்ன் பட்டியலில் இலங்கை அன்று இருந்தது. இன்று பிரதமரின் நடவடிக்கையால் நாம் அந்நிலையில் இருந்து முன்னேற்றம் கண்டுள்ளோம்.

ஜனவரி எட்டாம் திகதி இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவந்தோம். மீண்டும் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க அனுமதியளிக்க மாட்டோம். நாட்டை ஆட்சிசெய்ய முடியாவிடின் எங்களிடம் ஒப்படைக்கும் படி ராஜபக்ஷ கேட்கிறார். அவர்கள் அன்று நாட்டை ஆட்சிசெய்தமையை இந்த நாட்டுமக்களுக்குத் தெரியாதா?

18ஆவது திருத்தச்சட்டத்தில் கொண்டுவந்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கப்பார்த்தார். அதனை நாங்கள் முறையடித்துள்ளோம். 2004ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு பணத்தை கொடுத்து தான் தற்போது தேசபற்றாளர் என்று பேசு ராஜபக்ஷ தேர்தலை வெற்றிபெற்றார். அதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

யுத்தம் வெற்றிபெற்ற பின்னர் இரண்டு வாரத்தில் எவருக்கும் தெரியாது பாங்கி மூன் நாட்டுக்கு அழைத்து வந்நதார். நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டு மின்சார நாற்காளி பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]