ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை- பங்களாதேஷ் அணிகள் மோதல்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை- பங்களாதேஷ் அணிகள் மோதல்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்றைய முதல் போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

இதன்படி குறித்த போட்டியானது, இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் முதன் முதலாக 1983ஆம் ஆண்டு சார்ஜாவில் நடத்தப்பட்டது. முதலாவது தொடரில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணிக்கு சாம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

அன்று முதல் இதுவரை நடைபெற்ற 13 தொடர்களில் இந்தியா 6 தடவைகளும் இலங்கை 5 தடவைகளும் பாகிஸ்தான் 2 தடவைகளும் சம்பியன் கிண்ணங்களை வென்றுள்ளன.

கடந்த முறை கிண்ணம் வென்ற பெருமையுடன், இந்திய அணி நடப்பு சம்பியனாக இதில் களமிறங்குகிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஹொங்காங் அணிகள் A பிரிவிலும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் B பிரிவிலும் போட்டியிடுகின்றன.

கடந்த முறை இந்த ஆசியக் கிண்ணத் தொடர் T-20 போட்டித் தொடராக நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]