ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: இந்திய அணியிலிருந்து 3 முக்கிய வீரர்கள் வெளியேற்றம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: இந்திய அணியிலிருந்து 3 முக்கிய வீரர்கள் வெளியேற்றம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணியிலிருந்து 3 முக்கிய வீரர்கள் உபாதை காரணமாக வெளியேறியுள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோரே இவ்வாறு உபாதைக்குள்ளாகி தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்கள் மூவரினதும் இழப்பு தற்போது இந்திய அணிக்கு கடும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதையால் மைதானத்திலிருந்து வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா முழுத் தொடரிலும் இருந்து விலகியுள்ளார்.

அத்துடன், இப்போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலும் ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக தொடரிலிருந்து விலகினார். மேலும், ஹாங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சர்துல் தாகூர் இடுப்பில் உபாதைக் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், சித்தார்த் கவுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹங்கொங் ஆகிய ஆசியாவின் ஆறு பலம்வாய்ந்த அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஆசியக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் குழுநிலைப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று சுப்பர்-4 சுற்றுக்கள் ஆரம்பமாகின்றன.

இதற்கிடையில் இத்தொடரில் இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் உபாதைக்குள்ளாகி தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை தற்போது இந்திய அணிக்கு கடும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஆசியக் கிண்ண கிரிக்கெட்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]