ஆங் சான் சூகீ ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ளமாட்டார்

Aung San Suu Kyi

ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் மியன்மாரில் எழுந்துள்ள அமைதியின்மை காரணமாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும், உத்தியோகப்பற்றற்ற தலைவருமான ஆங் சான் சூகீ நேற்று நிவ்யோர்க் நகரில் ஆரம்பமான ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்ளமாட்டார் என அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மியன்மாரின் சிறுபான்மை சமூகமான ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளிலிருந்து அம்மக்களை பாதுகாக்க ஆங் சான் சூகீ தவறியுள்ளதாக சர்வதேசமட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஆங் சான் சூகீயிற்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசையும் திருப்பிப்பெருமாறு அழுத்தங்கள் பிரயாகிக்கப்பட்டுள்ளன.

மியன்மார் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் தாக்குதல்களிலிருந்து, தமது உயிரைக் பாதுகாத்துக்கொண்ட 164,000 ரோஹிங்கியர்கள், அயல் நாடான பங்களாதேஷிற்கு தப்பி சென்றுள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]