தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி அகிலமெங்கும் ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
வருகிற ஆகஸ்ட் 11-ல் `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]