அஸ்வினி கொலை – திடுக்கிடும் சில உண்மை சம்பவங்கள்

நேற்று சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் பல சம்பவங்கள் வெளிவந்துள்ளது.

அஸ்வினியும் அழகேசனும் சிறுவயது முதல் பழகி வந்ததாகவும், தந்தையில்லாமல் வறுமையில் வாடிய அஸ்வினி குடும்பத்தினர்களுக்கும், அஸ்வினியின் படிப்புக்கும் அழகேசன் தான் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது

தண்ணீர் கேன் போடுவது உள்பட கிடைத்த வேலையை செய்து அதில் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதியை அழகேசன் அஸ்வினியின் படிப்புக்கு செலவு செய்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினி தனது தாயாரின் கண்டிப்பு காரண்மாக அழகேசனுடன் பழகுவதை தவிர்த்துள்ளார். இருப்பினும் விடாமல் அஸ்வினி பின்னால் சென்ற அழகேசன் மீது அஸ்வினி போலீசில் புகார் செய்துள்ளார்.

போலீசார் முதலில் அழகேசனுக்கு அறிவுரை கூறி சமாதானம் செய்துள்ளனர். ஆனால் மீண்டும் அஸ்வினியை அழகேசன் தொடரவே போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

அஸ்வினியை மறக்க முடியாத அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் அஸ்வினியை கொலை செய்தவுடன் பொதுமக்கள் அடித்து உதைத்ததால் அவரால் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொலைக்கு காதல் துரோகம் தான் காரணம் என்றும், இந்த பிரச்சனையை இருவரின் சுற்றத்தார்கள் சரியாக அணுகாததாலும் ஒரு பெண்ணின் உயிர் போயுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]