அஸ்பெஸ்டஸ் தடை விவகாரத்தில் இலங்கையை பழிவாங்கப்பட்டதா?

அஸ்பெஸ்டஸ் தடை

அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தடை விதித்தமைக்கு பழிவாங்கும் வகையிலேயே, இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்திருக்கக் கூடும் என்று அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் தொடக்கம் வெள்ளை அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான தடையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இலங்கைக்கு அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடாக ரஷ்யாவே இருந்து வருகிறது.

இந்தநிலையிலேயே, இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்த தடைக்கும், அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை விதித்த தடைக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசநாயக்க இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இந்த இரண்டுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]