முகப்பு News அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பதவி விலகல்

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பதவி விலகல்

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஸப் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன் படி இவர் அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளதோடு, அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவியேற்றதன் பின்னர், புதிய அமைச்சரவையை ஸ்தாபிக்க தயாரான நிலையில் மேற்படி முடிவை அவர் எடுத்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உத்தேச பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அவர் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

பிரதமர் மெல்கம் டெர்ன்புல் பிரதமர் பதவிலிருந்து விலகிய பின்னர் ஜூலி பிஷப் அந்த பதவிக்கு முயற்சி செய்தார் எனினும், முதல் சுற்றிலேயே அவர் அகற்றப்பட்டார்.

லிபரல் கட்சியின் தலைமைத்துவ போராட்டம் அவரது 11 வருட பிரதித் தலைவர் பதவியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

மேற்கு அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 62 வயதான ஜூலி பிஷப் கடந்த 2 தசாப்த காலமாக கூட்டாட்சி அரசியல்வாதியாக செயற்பட்டு வருகின்றார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com