முகப்பு News Local News அவுஸ்ரேலியக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் இலங்கை பங்கேற்பு

அவுஸ்ரேலியக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் இலங்கை பங்கேற்பு

அவுஸ்ரேலியக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் இலங்கை கடற்படை பங்கேற்கவுள்ளது.

அவுஸ்ரேலியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அவுஸ்ரேலியாவின் டார்வின் துறைமுகத்துக்கு அப்பால் ககாடு (KAKADU) என்ற பெயரிலான 14 ஆவது கூட்டு கடற்பயிற்சியிலேயே இலங்கை கலந்து கொள்ளவுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் இந்தக் கூட்டுப் பயிற்சி, செப்ரெம்பர் 15 ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளது.

இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 24 போர்க்கப்பல்கள், 21 விமானங்கள், 2000 படையினர் பங்கேற்கவுள்ளனர்.

அந்தவகையில் அவுஸ்ரேலியாவில் நடைபெறும் இக்கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சீனக் கடற்படை போர்க்கப்பல் ஒன்றும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com