அவுஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு புதிய தலைவராக மெத்தியூ வேட் நியமனம்.

அவுஸ்திரேலிய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த அணியின் தலைவராக செயற்படும் ஸிடீவ் ஸ்மித் உபாதையடைந்துள்ள நிலையில் விக்கெட் காப்பாளரான மெத்தியூ வேட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வருகிற 30 ம் திகதி திங்கட்கிழமை ஆக்லாந்திழும், 2-வது போட்டி பெப்ரவரி 2 ம் திகதி நெய்ப்பரிலும், 3 வது மற்றும் இறுதி போட்டி பெப்ரவரி 5 ம் திகதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.