அவுஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் தடுமாறும்- ரிக்கி பொண்டிங்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 23 ம் திகதி புனேவில் தொடங்குகிறது.

இந்திய தொடரில் ஆஸ்திரேலிய அணி திணறும் என்று முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பொண்டிங் கணித்துள்ளார்.

எந்தவொரு அணியும் இந்தியா சென்றால் திணறத்தான் செய்கிறது. இந்திய மண்ணில் விளையாடச் செல்லும் அணிக்கு மிக கடினமான நிலை ஏற்படுகிறது.

இந்தியாவில் முதல் இரண்டு நாட்களுக்கு ஆடுகளம் சிறப்பாக இருக்கும். அதன்பின் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் மாயாஜாலம் காட்டுவதற்கு ஏதுவாக மாறிவிடும்.

ஆஸ்திரேலியா அணி துணைக்கண்டத்திற்கு செல்கிறதோ, அங்கெல்லாம் முதல் நாளில் இருந்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில் அவுஸ்திரேலிய அணி தடுமாற்றத்தை சந்திக்கும் எனவும் பொண்டிங் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2012-ல் ஆஸ்திரேலியா இந்தியா சென்று டெஸ்டில் விளையாடியபோது 4-0 என இந்தியா வெள்ளையடிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.