அவுஸ்திரேலிய அணியிடம் படு தோல்வி அடைந்த இலங்கை அணி!

இன்னிங்சிஸாலும் 40 ஓட்டங்களாலும் இலங்கை அணி அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான  முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 144 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 323 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் , இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் மூன்றாவது நாளான இன்று 139 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தனது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் 40 ஓட்டங்களால் படுதோல்வியடைந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]