அவுஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அவுஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையர்கள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 29 இலங்கை பிரஜைகள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இவர்கள் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிங்களவர்களே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் 12 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களும் உள்ளனர்.

அவர்கள் மாமா மற்றும் தந்தையுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ள இவர்கள், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால், Lear Mouth கடற்பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]