அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து நாடுகளிலிருந்து 26 இலங்கையர்கள் நாடுகடத்தல்

ஸ்ரீலங்கன் விமான

அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து நாடுகளிலிருந்து 26 இலங்கையர்கள் நாடுகடத்தல்

புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட 26 இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.

இரண்டு நாடுகளில் இருந்த இரண்டு சிறப்பு விமானங்கள் ஊடாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தே, 26 இலங்கையர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியவில் இருந்து 15 இலங்கையர்களுடன் காலை 6.20 மணியளவில் சிறப்பு விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர், சுவிட்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்களை ஏற்றிக் கொண்டு, காலை 9 மணியளவில் மற்றொரு சிறப்பு விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து சேர்ந்தது.

இலங்கையர்களுடன் பெரும் எண்ணிக்கையான அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து பாதுகாப்பு அதிகாரிகளும், வந்திருந்ததாக விமான நிலைய செய்திகள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]