அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் முன்னாள் போராளி

முன்னாள் போராளி

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது46) அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாளையதினம் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

இந்த நிலையில், தாம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் கூட வாய்ப்புகள் உள்ளதாக, சாந்தரூபன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

தம்முடன் இணைந்து போராடிய இரண்டு முன்னாள் போராளிகளுக்கு, விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தமைக்காக அவுஸ்ரேலியா அடைக்கலம் அளித்துள்ள அதேவேளை, தமக்கு அடைக்கலம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இவர் தாம் விடுதலைப் புலிகளுக்காக சண்டைப்படகுகளை வடிவமைத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், சாந்தரூபனின் பின்னணி தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர் விடுதலைப் புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர் என்பதற்கோ, படகுத் தளத்துக்குப் பொறுப்பானவராக இருந்தார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]