அவர் சொன்ன மாதிரி தான் நான் நடக்கிறேன் – சமந்தா

சமந்தா திருமணம் செய்ததன் பின் பல படங்களில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு  திரையுலகில் இன்னமும் முன்னணி நடிகையாகவே திகழ்கிறார். இதனால் அவரிடம் பல பட வாய்ப்புகள் வருகின்றன.

சமந்தா, ராம்சரண் ஜோடியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்திற்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை கிடைத்தது. படமானது ரூ.100 கோடி வசூலைத் தாண்டியியுள்ளது. படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவர் தற்சமயம் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: என் கணவரின் அறிவுரைப்படி நான் நடப்பதால், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்படி அவர் கொடுத்த அறிவுரையானது “ஒவ்வொரு படத்திலும் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். ரசிகர்கள் தீர்ப்பு நம் கையில் இல்லை என்று என் கணவர் நாகசைதன்யா கூறியதை பின்பற்றுகிறேன். நடிக்கும் படம் பற்றியும், அந்த கதை பற்றியும் அவரிடம் பேச மாட்டேன். சினிமாவையும், குடும்பத்தையும் நாங்கள் மிக்ஸ் பண்ணமாட்டோம்.

சமந்தா

தோல்விகளை கையாளுவது எப்படி என்பதை கணவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். முன்பு எல்லாம் என்படம் ஓடாவிட்டால் கவலையுடன் இருப்பேன். இப்போது, கணவர் சொல்வதை பின்பற்றுவதால் ஒரு படம் ஓடாதது பற்றி கவலைப்படுவதே இல்லை. தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ரங்கஸ்தலம்’ என் உழைப்புக்கு ரசிகர்கள் தந்த நற்சான்றிதழ்”.

சமந்தாசமந்தா