“அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை” – ரஞ்சித் மத்தும பண்டார

“அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை” – ரஞ்சித் மத்தும பண்டார

கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, 10 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் கடந்த 6ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் வியாழக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

நாடு முற்றிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது எனவே, அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது என்றும் இனிமேல் அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவசரகாலச்சட்டம், சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]