அழகும் ஆரோக்கியமும் தரும் கண் மை

இந்த காலத்தில் காஜல் என்று அழைக்கப்படும் ஒரு அழகுப்பொருள் தான் கண் மை. கண்ணிற்கு அழகு சேர்க்க பெரும்பாலான பெண்களால் பயன்படுத்தப்படுகிறது.

உலகத்தில் முதன் முதலாக பெண்களால் பயன்படுத்தப்பட்ட, முதல் அழகுப்பொருள் கண் மை தான். தங்கள் அழகிய கண்களை மேலும் அழகாக்க பெண்கள் ஆதி காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தி வரும் முக்கிய அழகு சாதனம் காஜல்.

கண்மை அழகு பொருளாக மட்டும் இல்லாமல், ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பொருளாகவும் காஜல் விளங்குகிறது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்மை கற்பூரம், காய்கறி எண்ணெய், நெய் போன்றவற்றை கலந்து தயாரிக்கப்பட்டது.

ஆனால், இன்றைய கால காஜலோ பல வேதி மற்றும் இரசாயன பொருட்கள் கலந்து தயாரித்து, சந்தைகளில் விற்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலந்த காஜல் உங்கள் கண்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆர்கானிக் காஜல் 100 சதவிகிதம் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது. ஆயுர்வேதிக் கண்மையும் இயற்கை பொருட்களை மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்டதே! ஆயுர்வேதிக் காஜல் காஸ்டார் எண்ணெய், நெய், காப்பர் பாத்திரம், கற்பூரம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பாதாம் பருப்புகளும் காஜல் தயாரிப்பில் பயன்படுத்தப்படலாம். ஆயுர்வேதிக் காஜல் கண்களை பாதுகாக்க பயன்படுகின்றன் மேலும் ஆர்கானிக் காஜலோ கண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

கண்ணிற்கு கண்மை பயன்படுத்துவதால், தூசி மற்றும் துரும்புகள் கண்ணில் படுவதை தடுக்கலாம். மேலும் கண் மை கண்ணிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

கண்கள் ஒருவித ஒளியுடன் திகழ இந்த கண் மை பெரிதும் துணை புரிகிறது. கண்ணின் தசைகளை பலப்படுத்த உதவுகிறது. கண்ணில் தோன்றும் கண்ணீரை உடனடியாக மறையச் செய்கிறது.

கண்மையில் அஸ்டரிங்கென்ட் குணங்கள் இருப்பதால், அது கண்ணில் ஏற்படும் இரத்தக் குழாய்களை மறைத்து, கருவிழி மற்றும் வெள்ளை விழிகளை மட்டும் வெளிப்பட செய்கிறது.

காஸ்டார் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் கண்மை கண்ணிற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. இந்த எண்ணெயில் வைட்டமின் இ நிறைந்திருப்பதால், அது கண்ணின் இமைகளை அடர்தியானதாகவும், கருமையானதாகவும் மாற்ற உதவுகிறது.

கண்மை கண்ணில் ஏற்படும் அழுத்தங்களை மற்றும் சோர்வை குறைத்து, கண்ணை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது
காப்பர் மற்றும் சில்வர் சேர்த்து தயாரிக்கப்படும் கண்மை கண்ணின் அழுத்தங்களை, தொந்தரவுகளை குறைத்து ஓய்வை அளிக்கிறது.

கண்ணில் ஏதேனும் ஒவ்வாமைகள் ஏற்பட்டால், அவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது. கண்கள் வீக்கமடைந்திருந்தால், அதை வற்ற செய்து கண்ணின் நலனை மேம்படுத்த உதவுகிறது.

கண்மை தயாரிப்பில் சேர்க்கப்படும் கற்பூரம் கண்ணை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது கண்ணில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க பேருதவி புரிகிறது.

கற்பூரம் கண்களில் ஏற்படும் மைனர் குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி, நீண்ட நாட்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்கிறது
கண்மை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் கண்ணைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

இது கண்ணீரால் கண்ணில் தாங்கும் உப்பு மூலக்கூறுகள், மேக்கப்பால் கண்ணின் மேல் மற்றும் கீழ் இமைகளை அடையும் சிறு துகள்கள், தூசிகள் போன்றவற்றை நீக்கி, கண்ணை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இது கண்ணில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]