அழகான பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் 8 இரகசியங்கள்!

இன்று நீங்கள் பார்க்கும் அழகான பெண்களில் பத்தில் ஒருவர் தான் இயற்கை அழகு கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் சில ஆயிரங்களை செலவழித்து தங்களை அழகுப்படுத்தி வெளியுலகிற்கு அழகு போல காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.

தூங்கி எழுந்து முகம் கழுவிய பிறகு, சமையல் கட்டில் வியர்க்க, வியர்க்க சமைத்து முடித்த பிறகு, வேலைக்கு சென்று பஸ்ஸில் முட்டி மோதி வீடு திரும்பிய பிறகும் ஒரு பெண் அழகாக இருக்கிறாரே, அது தான் உண்மையான அழகு. மற்றவை எல்லாம் போலி. இனி, வெளியிலகிடம் இருந்து அழகாக காட்டிக் கொள்ளும் மறைக்கும் சில இரகசியங்கள் பற்றி பார்க்கலாம்…

01
கண்டிஷனர், லிப்ஸ்டிக், பவுண்டேஷன், பிளிஷ் லொட்டு லொசுக்கு என தங்களது அழகை பராமரிக்கவே பெண்களின் பாதி சம்பளம் செலவாகிவிடும்.

02

ஒன்று டயட் அல்லது ஜிம், இந்த இரண்டில் எதையாவது ஒன்றை கடினமாக பின்பற்றி தான் உடல் அழகி பேணிக் காக்கின்றனர் பெண்கள். நீங்களே கூட கவனித்துருக்கலாம்… அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ள பெண்கள் ட்ரீட் வைத்தால் கூட அதிகம் சாப்பிட மாட்டார்கள்.

03

காய்கறி, பழங்களை மட்டுமே மேய்ந்துக் கொண்டிருப்பார்கள். கேக் மட்டும் கலோரிகளை கரைக்கும் உணவாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை அவர்களது மனதில் இருந்துக் கொண்டே இருக்கும்.

04

ஆடைக்கு ஏற்ற காலனி, உபகரணங்கள் என எக்ஸ்ட்ரா செலவுகளின் பட்டியலை டிக் மார்க் செய்யவே ஐ.டி-யில் எக்ஸ்ட்ரா டைம் வேலை செய்ய வேண்டும்.

05
அதிகாலை சுறுசுறுப்பாக இருக்க எழுந்திருக்கிறார்களோ இல்லையோ, தலை சீவி, மேக்கப் போட இவர்கள் அதிகாலை எழுந்திருத்தே ஆகவேண்டும். அதிலும், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் வாழும் பெண்களுக்கு அதிகாலையே சற்று நேரதாமதம் தான். டிராபிக் வேறு கொன்று எடுக்கும்.

06

இறுக்கமான ஜீன்ஸ், ஸ்லிம் வியர், ஹைஹீல்ஸ் என அழகை வெளிபடுத்த இவர்கள் பயன்படுத்துபவை எல்லாம் உடலுக்கு அசௌகரியம் மற்றும் ஆரோக்கிய கேடுகளை தான் அளிக்கும். இதை இவர்களே கண்கூட தினமும் உணர்ந்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

07

இவ்வளோ அழகா இருக்கா, கண்டிப்பா இவளுக்கு லவ்வர் இருக்கும் என்று கருதியே பலர் இவருடன் பழக மாட்டார்கள்.

08

ஆனால், உண்மையில் எது அழகு தெரியுமா? சிம்பிளான வாழ்க்கை. அன்பான துணையுடன், இனிமையான வாழ்க்கையை தாண்டி வேறு அழகு என்ன இருக்க போகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]