அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு

அளுத்கமயில் இடம்பெற்ற
aluthgama

கடந்த 2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்..

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைக் கூறினார்.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வரையிலும் நட்ட ஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]