அளுத்கமகே மோசடியில் ஈடுபடவில்லை என்கிறார் தயாசிறி

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கெரம் போட் இறக்குமதி விவகாரத்தில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மோசடியில் ஈடுபடவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அதனை தான் பொறுப்புடன் கூறமுடியும் என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக பாரிய சேவையாற்றியுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பத்துக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]