“அல்லா என்னை மன்னித்துவிடு” என எழுதி வைத்துவிட்டு வெடித்துச் சிதறிய இளம்பெண் – வைரல் வீடியோ!

“அல்லா என்னை மன்னித்துவிடு” என 21 முறை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறும் வீடியோ வெளியாகி பரப்பரப்பை ஏட்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றின் அருகே, கரினா ஸ்பிரிடோனோவா(25) என்னும் பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

குறித்த பெண் கருப்பு நிற உடையும், தலையில் ஹிஜாபும் அணிந்து க்ரோஸ்னி பகுதியில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரை நோக்கி சென்றதைக் கண்டு, பொலிஸார் அவரது அடையாள அட்டையைக் காட்டும்படி கேட்டுள்ளனர்.

அந்த பெண்ணோ நிற்காமல், பொலிஸாரை நோக்கி முன்னேறுவதைக் கண்ட பொலிஸார் சுதாரித்துக் கொண்டு, எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால்  சுட்டுள்ளனர்.

அதற்கு அஞ்சாத அந்த பெண் தன் உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தார். உடல் சிதறி அதே இடத்தில் அந்த பெண் உயிரிழந்த நிலையில் பொலிஸாருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

குறித்த பெண் கவர்ச்சியாக உடையணிந்து, களியாட்ட நிகழ்வுகளுக்கு செல்லும் பழக்கம் கொண்டவர், பின்னர், தீவிர மதப்பற்றுடையவரானார் என்று தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், அவர் ஐ.எஸ் அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]