அல்ஜீரியா ராணுவ விமான விபத்து- 105க்கும் மேற்பட்டோர் பலி!

அல்ஜீரியா தலைநகரில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 105க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிது.

அல்ஜீரிய தலைநகர் அல்ஜீரிஸ் அடுத்து உள்ள பவ்பரிக் விமான நிலையத்திலிருந்து 200 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தபட்சம் 105 ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பலரும் காயமடைந்திருக்கலாம் எனவும், விபத்திற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நிகழ்ந்ததை அடுத்து தற்போது மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]