அலோஷியஸ், பலிசேன பிணை குறித்து முக்கிய அறிவிப்பு

பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் பிணை தொடர்பான உத்தரவு குறித்த தகவல் அறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் எழுத்துமூல அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.