அலோசியஸ் அறையில் இருந்து அலைபேசிகளும் சிம் அட்டைகளும் மீட்பு

அலோசியஸ் அறையில்

அலோசியஸ் அறையில் இருந்து அலைபேசிகளும் சிம் அட்டைகளும் மீட்பு

அர்ஜுன் அலோசியஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையை சோதனைக்கு உட்படுத்திய போது அவரது சிறை அறையில் இருந்து 03 அலைபேசிகளும் 05 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு அலைபேசி அவரின் சிறைச்சாலை மெத்தைக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியஇருவரையும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, அர்ஜுன் அலோசியஸின் தந்தை மற்றும் பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் ஏனைய 8 பணிப்பாளர்கள் ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் குறித்த நபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]