அலுவலக நேரங்களில் அரச உத்தியோகத்தர்கள் இப்படி செய்தால் உடனடி பதவி நீக்கமாம்??

அரசாங்க சேவையில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்கள் பணி நேரங்களில் தொலைபேசி மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் காலத்தை வீணடிப்பதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொலைபேசிகளில் குறுஞ் செய்திகளை அனுப்புவது, பேஸ்புக் பார்ப்பது தொடர்பில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர். இந்நிலையில் எத்தனை மணி நேரம் சரியாக பணிப்புரிகிறார்கள்.

எந்தவொரு அதிகாரியாக இருந்தாலும் பணிபுரியும் நேரத்தில் பேஸ்புக் பார்த்தார் என எனக்கு புகார் கிடைத்தால் உடனடியாக பணியில் இருந்து நீக்கி விட்டு அதன் பின்னர் தான் குறித்த அதிகாரியிடம் விசாரணை நடத்துவேன். பொது மக்களுக்கு வழங்கும் சேவையானது சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]