அலுகோசு பதவிக்கு வெளிநாட்டுப் பிரஜையொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டுப் பிரஜையொருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் (திங்கட்கிழமை) அதற்கான காலக்கெடு முடிவடைகின்றது.

எனினும், இதுவரையில் கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, வெளிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், கத்தோலிக்க திருச்சபை, மனித உரிமை அமைப்பு ஆகியன இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]