அலி லாறிஜனி இலங்கையை வந்தடைந்தார்

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாறிஜனி ( Ali Larijani) தலைமையிலான குழு, இலங்கையை வந்தடைந்துள்ளது.

விசேட விமானம் ஒன்றில் ஊடாக இன்று இரவு அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரானின் தலைநகர் தெஹரானிலிருந்து புறப்பட்ட இவர்கள் வியட்நாமுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், அங்கிருந்து புறப்பட்டு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இந்த விஜயத்தின்போது, இரண்டு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவு தொடர்பிலான விடயங்களை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]