அலியா பட்டுக்கு இது தேவையா?

செக்ஸ் கொமடி படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் பொலிவுட் நடிகை அலியா பட். அழகு பொம்மையான பொலிவுட் நடிகை அலியா பட்டை அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர் ஏதாவது உளற அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள்.

பொலிவுட்டில் செக்ஸ் கொமடி படங்களில் பட்டையை கிளப்பி வருகிறார் முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன். இதை பார்த்த அலியா தனக்கு சன்னி போன்று செக்ஸ் கொமெடி படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறினார்.

அவ்வளவு தான் செக்ஸ் கொமெடி பட இயக்குனர்கள் கதையுடன் அலியா வீட்டிற்கு படையெடுத்து வருகிறார்களாம். தெரியாத்தனமாக சொல்லி சிக்கிட்டேனே என அலியா புலம்புகிறாராம்.