அலரி மாளிகை பகுதியில் பெரும் பரபரப்பு – ஐ.தே.க ஆதரவாளர்களுக்கு அவசர அழைப்பு

நாட்டில் அடுத்தடுத்து நிலவி வரும் சர்ச்சையான சூழ்நிலையில் இன்று வரை பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையை ஐக்கிய தேசிய கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்ட புதிய பிரதமர் மஹிந்த அறிவித்துள்ள நிலையில் புதிய பிரதமருக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் , மஹிந்த தரப்பு அத்துமீறி அலரி மாளிகையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீர்மானம் செய்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அதனை தடுக்கும் நோக்கில் ஐ.தே.க ஆதரவாளர்களை அலரி மாளிகையில் கூடுமாறு ஐக்கிய தேசிய கட்சி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

இதன் காரணமாக அலரி மாளிகை பகுதியில் பரபரப்பு உண்டாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]