அலரி மாளிகைக்குள் நடந்த மந்திராலோசனையின் பின்னணி! ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கையா?

கடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் சந்தித்து சென்ற வார அரசியல் குறித்து பேசியுள்ளனர்.

அங்கு சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல “ வரும் ஜனாதிபதித் தேர்தலில், கட்சித் தலைவர் போட்டியிட்டால்சந்தோஷம் எனினும், ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை கட்சியின் செயற்குழுதான் தீர்மானிக்கவேண்டும். தாமரைமொட்டுச் சின்னத்தைக் கொண்ட கட்சியைப் போல, குடும்ப உறுப்பினர்கள்  அடங்கிய செயற்குழு அல்ல” என ஆரம்பித்தார்.

அமைச்சர்களான சஜித் பிரேமதாஸாவுக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில், பொதுவெளியில் இடம்பெற்றுவரும் கருத்துமோதல்கள் தொடர்பிலும் அங்கிருந்தவர்கள் தெரிவிக்க வரும் வாரத்துக்குள் இதற்கான தீர்வை வழங்குவதாக  பிரதமர் கூறினார்.

மேலும், “சேர், புத்தாண்டில் அரசாங்கத்​தை கலைப்பதாகவும், பிரதமர் அல்லது அமைச்சர்களை கைது செய்வதாகவும் கதைகள் அடிபட்டன. என்றாலும், ஒன்றுமே நடக்கவில்லையே என யாரோ ஒருவர் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, “அது பத்திரிகையாசியர்களை, ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடிய போது, கூறிய கதையாகும். புதிய தகவல்கள் பத்திரிகையாசிரியர்கள் கேட்டபோது, புத்தாண்டு பிறக்கும்போது, நல்​லதொன்று நடக்கும் பாருங்கள்” எனக் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த கதைதான், இவ்வாறு பரவியுள்ளது.

“அதனால்தான் பத்திரிகையில் கடமையாற்று ஊழியர்களை, புத்தாண்டு தினத்தன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு சில பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என வைத்தியர் காவிந்த ஜயவர்தன, தெரிவித்தார்.

அங்குள்ளவர்கள் கைதட்ட, எம்.பி ஷமிந்த விஜயசிறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வைக்ககூடியவர் இல்லை அதனால் தான் கை தட்டினார்கள் என கூறினார்.

இதனால் தான் ஜனாதிபதியின் ஜப்பான் விஜயமும் தடைப்பட்டுவிட்டது” என ஹேஷா வித்தான கூற,  “அவர், கடந்த வருடமும் ஜப்பானுக்குச் சென்றார். ஜப்பானுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஜப்பான் சந்தோஷமாக இல்லை. அதனால்தான், உத்தியோகபூர்வ அழைப்பை, அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கு ஜப்பான் விடுத்திருந்தது” என சபை முதல்வர் கிரியெல்ல கூறினார்.

மேலும், ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம், சஜித் – ரவிக்கு இடையிலான பகிரங்க கருத்து மோதல்கள், நாடுக்கு திரும்பும் போது கோட்டாபயவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பளிப்பு  உட்பட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]