ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கி தமிழ் நாடு அரசின் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டும், அலங்காநல்லூரில் இன்று அறிவிக்கப்பட்டபடி ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இன்று , ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு , அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும், அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் குழுமி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைப்பார் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தொடங்கிய போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
நன்றி பிபிசி தமிழ்