அறுவைசிகிச்சை செய்து கொண்ட குஷ்பு

அறுவைசிகிச்சை செய்து கொண்ட குஷ்பு.

Kushboo

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நடிகை குஷ்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பல வருடங்களாக நடிகை குஷ்புக்கு வயிற்று வலி இருந்துள்ளது.

இதன்போது அவர் வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இருப்பினும் சிகிச்சைக்கான பலன் கிடைக்காமையினால், அவரது வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் உள்ள கட்டியை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

இதற்கமைய சில தினங்களுக்கு முன்பு நடிகை நடிகை குஷ்புவுக்கு அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.

Kushboo

இந்த நிலையில் நடிகை குஷ்பு அறுவை சிகிச்சையின் பின் பூரண குணமாகி வருவதாகவும், சில வாரங்களின் பின்பு இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]