அறிக்கையை படித்துவிட்டு பதில் சொல்கின்றேன் – ரவி

ரவி

இலங்கை மத்திய வங்கி, தான் அமைச்சராக பதவிவகித்த நிதியமைச்சின் கீழ் இயங்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அதன்காரணமாக, பிணைமுறி விசாரணை ஆணைக்குழு தன்மீது என்ன குற்றச்சாட்டை முன்வைக்கின்றது என்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஆணைக்குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கை தொடர்பில் தெளிவை பெற்ற பின்னர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]