அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சர்வதேச பொலிஸார், குற்றுப்புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

இது குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துககொள்ளப்பட்டபோது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பல முறை சிவப்பு அறிவித்தலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கபட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும், அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]