அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதில் சிக்கல்

arjuna

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட 10 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி விநயோக மோசடி தொடர்பில் தற்போது சந்தேகத்திற்குரியவராக அர்ஜூன் மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ளார். அவரை குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜனரத்ன, கடந்த 5ஆம் திகதி அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தார்.

இதற்கமைய, 10 நாட்கள் கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது சிங்கபூரில் உள்ள அவர் இதுவரையில் நாடு திரும்பவில்லை.

இந்த நிலையில், அர்ஜுன் மகேந்திரன் 15 ஆம் திகதி இலங்கைக்கு வந்தால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால், விமான நிலையத்தில் வைத்து அவரைக் கைதுசெய்ய முடியும் என சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

எனினும், தாம் இலங்கைக்கு வரப்போவதில்லை என அர்ஜுன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள ஒருவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் இலங்கையும் சிங்கப்பூரும் இது தொடர்பில் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவில்லை. அதனால், இரு தரப்பினரும் இந்த விடயத்தில் உடன்பட முடியாது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு சிங்கப்பூரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.