அர்ஜூன் அலோசியஸிடமிருந்து கையடக்கத் தொலைபேசித் தொடர்பாடலைப் பெற நடவடிக்கை

அலோசியஸ் அறையில்

அர்ஜூன் அலோசியஸ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் இடம்பெற்ற தொடர்பாடலைப் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தரவுகளை வழங்குமாறு குறித்த நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அர்ஜூன் அலோசியஸ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து அண்மையில் 3 கையடக்கத் தொலைபேசிகளும் 5 சிம் அட்டைகளும் கண்டெடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜனரல் யசந்த கோதாகொட கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அவற்றில், ஒரு கையடக்கத் தொலைபேசி அர்ஜூன் அலோசியஸின் தலையணைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சிறைச்சாலையின் புலனாய்வுப்பிரிவு அதிகாரி மற்றும் மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]