அர்ஜூன் அலோசியஸுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]