முகப்பு News Local News அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோக மோசடி தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இவர்கள் இருவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com