இந்திய ரசிகர்களை போல் நடந்து கொள்ளாதீர்கள்: அர்ஜுனா

உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் கேப்டன் , அர்ஜுன ரணதுங்க, கிரிக்கெட் போட்டிகளின் முடிவில் இந்திய ரசிகர்களைப் போல் நடந்துகொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்

இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். பல்லேகலவில் உள்ள பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசியது குறிப்பிடத்தக்கது.