அரை நிர்வாண கோலத்தில் கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்த கொலையாளி சிக்கினான்

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார் . இவருடைய மகள் பெயர் பிரகதி கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். சொந்த ஊர் ஒடஞ்சத்திரம் என்பதால் பிரகதி கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் கல்லூரியில் இருந்து வெளியே சென்ற பிரகதி திரும்பி வரவில்லை . இதனால் அதிர்ச்சியடைந்த அடைந்த பெற்றோர் பிரகதியின் செல் போனை தொடர்பு கொண்டனர் ஆனால் பிரகதியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பிரகதி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பிரகதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் பிரகதி அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார்,பிணத்தை கைப்பற்றிய போலீசார் குற்றவாளியை தேடிவந்தனர்

பிரகதியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பிரகதியின் அதை மகனான சதீஷ் குமாரை சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.இதை தொடர்ந்து சதீஷ் குமாரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பிரகதியை கொலை செய்ததை சதீஷ் ஒப்புக்கொண்டான்.

சதீஷ் குமாரும் பிரகதியும் விரும்பியதாகவும், பிரகதியை தனது திருமணம் செய்து வைக்கச் சொல்லி சதீஷ் குமார் கேட்க பிரகதியின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.பிறகு சதீஷ் குமாருக்கு வேறு இடத்தில் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. அவ்வப்போது கோவை வந்து பிரகதியைப் பார்த்துச் செல்வார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பிரகதிக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சதீஷ் குமார் கொன்றதாக கூறப்படுகிறது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]