முகப்பு News அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட ஐ.நா.சபையின் கொடி

அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட ஐ.நா.சபையின் கொடி

அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட ஐ.நா.சபையின் கொடி. கொஃபி அனான் நேற்று காலமானதை முன்னிட்டு இரங்கள் தெரிவிக்கும் முகமாக அரைக்கம்பத்தில பறக்கவிடப்பட்டுள்ளது.

ஐ.நா.சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான கொஃபி அனான் நேற்று காலமானார். இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஐ.நா.சபையின் உத்தியோகபூர்வ கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

தனது வாழ்நாள் நிறைவடையும் வரை பல தசாப்தங்களாக ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிலவிய நீடித்த மோதல்கள் தொடர்பில் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்ட முக்கிய இராஜதந்திரியான கொஃபி அனான் தனது 80ஆவது வயதில் நேற்று காலமானார்.

கானாவை பூர்வீகமாக கொண்டிருந்த அனான் சுகயீனம் காரணமாக நேற்று சுவிட்ஸர்லாந்து பேர்ன் நகரின் உள்ள மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com