அருள்வாக்கு சொன்ன சாமியார் தலைகுப்புற விழுந்து பலியான சோகம்- கோவையில் நடந்த அதிர்ச்சி

மரத்திலிருந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய பூசாரி எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் அருகே சுண்டக்காமுத்தூர் பகுதியில் பழமையான கோயில் அமைந்துள்ளது. இங்கு அய்யாசாமி என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வந்தார்.இங்கு இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற சிவராத்திரி பூஜையின்போது 20 அடி உயர கம்பத்தின் மீது கிடைமட்டமாக படுத்தவாறு குறி சொல்ல முயன்ற அய்யாசாமி, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து படுகாயமடைந்த பூசாரி அய்யாசாமியை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பூசாரி அய்யாசாமி 20 அடி மரத்திலிருந்து கீழே தவறி விழும் தற்போது காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]