22ம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் கடற்படை முகாமில் தேடுதல்

யாழ்ப்பாணம், அரியாலை உதயபுரத்தில் கடந்த 22ம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைக்காக கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவினர் மண்டைதீவு கடற்படை முகாமிலும் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

உதயபுரத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணத்தின் போது பயணித்த வாகனத்தை மண்டைதீவு கடற்படை முகாமில் கண்டதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் இடம்பெற்றுள்ளது.

கடற்படை முகாமில் வாகனத்தை சோதனை செய்வதற்கான அனுமதி நீதவானிடம் கோரப்பட்டிருந்த்து. அதனை ஏற்று நீதிவான் அனுமதியை வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரெனப் பயணித்த குழுவினர் கடற்படை முகாமில் அவ்வாறான வாகனம் ஏதும் உள்ளதா என்பதனை தேடியுள்ளனர்.

இருப்பினும் இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட குழுவினரிடம் எந்தவொரு தடயமும் கிடைக்காதமையினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். குறித்த குழுவினர் தொடர்ந்தும் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]