அரிசி வியாபாரியை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்

திருவள்ளூர் அருகே மணல் கடத்தல் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி ‘அரிசி வியாபாரி’யை காரில் கடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரிடம் கடந்த சனிக்கிழமை ஜான் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேச வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் ஜானை சந்திக்க சென்ற ஏழுமலையை, அங்கு ஏற்கனவே காத்திருந்த புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த சாய், பாலாஜி, மைக்கேல், டேவிட் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் இன்னோவா காரில் காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

அப்போது மணல் கடத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தாயா? எனக் கேட்டு ஏழுமலையை அந்த கும்பல் பலமாக தாக்கியுள்ளது. சீத்தஞ்சேரி என்ற இடத்திற்கு சென்ற அந்த கும்பல், அப்போதும் ஆத்திரம் தீராமல் பலமாக தாக்கியதுடன் இங்கேயே ஏழுமலையை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர்.

அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் சாய் என்பவரின் உறவினர் ஒருவர் இருப்பதாகவும், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரிடம் கொண்டு செல்லலாம் எனவும் கூறி அங்கிருந்து ஏழுமலையை அழைத்துச் சென்றுள்ளனர்.

விடியற்காலை 3 மணியளவில் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள மாதா கோயில் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, தனக்கு தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி காரிலிருந்து இறங்கிய ஏழுமலை, திடீரென கூச்சலிட்டபடியே சாலையில் ஓடினார். இதனால் அங்கு படுத்திருந்தவர்கள் ஏழுமலையின் சத்தம் கேட்டு விழித்து, கடத்தல்காரர்களை விரட்டினர்.

ஆனால் 7 பேர் கொண்ட கும்பல் யாரிடமும் சிக்காமல் தப்பி ஓடிவிட்டது. இதனையடுத்து கோயில் பாதிரியார் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏழுமலையை ஒப்படைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]