அரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க நடவடிக்கை

அரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க நடவடிக்கை

கிலோ அரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க அரிசி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் தமக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்கவும், அரிசியை பொதிசெய்யும் இடங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]